-டீன் பைரூஸ்-
காத்தான்குடி;காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளனத்தினால் பயனாளிகளுக்கான கூட்டு ஸகாத் கொடுப்பனவுகளைக் கையளிக்கும் நிகழ்வு (29.01.2014 புதன்கிழமை) பி.ப.04.00 மணிக்கு அஷ்ஷஹீத் அல்ஹாஜ் ஏ அஹமது லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தினில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வு காத்தான்குடி சம்மேளன ஸக்காத் குழுவின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம் அலியார் (றியாழி) MA அவா்களின் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வுக்கு காத்தான்குடி சம்மேளனத்தின் தலைவா் அல்ஹாஜ் எம். காலித் JP, பிரதி தலைவா் கௌரவ அல்ஹாஜ் ஏ.எல்.அப்துல் ஜவாத் BA-LLB உட்பட சம்மேளனத்தின் செயலாளர்கள்,அதன் உறுப்பினா்கள், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாசபையின் கௌரவ செயலாளர் அதன் உறுப்பினா்கள், பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள், உலமாக்கள், ஊடகவயலாளர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வுகள் யாவும் கவிமணி எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி) அவா்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம் பெற்றது. தலைமை உரை காத்தான்குடி சம்மேளன கூட்டு ஸக்காத் குழுவின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம் அலியார் (றியாழி) MA அவா்களினால் நிகழ்த்தப்பட்டது.
காத்தான்குடி சம்மேளன கூட்டு ஸகாத் நிதியத்தின் கௌரவ செயலாளர் அல்ஹாஜ் AM சாதிக்கீன் JP அவா்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.அதன் போது….
பள்ளிவாயல்கள் 6 வலயங்களாக பிரிக்கப்பட்டு அவற்றிலிருந்து 2013 ஆண்டிக்கான ஸக்காத் விண்ணப்பங்கள் சுமார் 1380 பொது மக்களிடமிருந்த கிடைக்கப் பெற்றது. அவற்றில் சுமார் 350 பயனாளிகளுக்கு மாத்திரமே இம்முறை கூட்டு ஸக்காத் வழங்கப்படுவதாக கூறினார்.
2013 ஸக்காத் நிதியாக ரூபாய் இரண்டு கோடி எதிர்பார்க்கப்பட்ட போதும் 15385000/= ரூபாய் மாத்திரம் கிடைக்கப் பெற்றமையால் இந்நிதியினை பகிர்ந்து பின்வரும் முறைப்படி பயனாளிகளுக்கு வழங்கப்படுவதாகவும் செயலாளர் அல்ஹாஜ் AM சாதிக்கீன் JP தெரிவித்தார்.
- வீடு திருத்தம். 135
- தொழில். 75
- மலசல கூடம். 50.
- கடன். 47
- வாழ்வாதாரம். 43.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வு அல்லாஹ்வின் உதவியோடு மிகவும் சிறப்பாக நடை பெற்றதினை காணக் கூடியதாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.












Leave a comment