ஜலாலியா வீதி வடிகான் அமைப்புக்கான அடிக்கல் நகரபிதா ஹில்மி மஹ்ரூபினால் ஆரம்பித்து வைப்பு

a.k_4[1] ரைஸ் 
 

கிண்ணியா: கிண்ணியா நகரசபைக்குட்பட்ட அண்ணல் நகர் பிரதேசத்தின் ஜலாலியா பள்ளியிலிருந்து செல்லும்  வீதியில் வடிகான் அமைப்பதற்கான அடிக்கல்   இன்று 28.01.2014 ஆம் திகதி கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபினால் நாட்டி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மழை காலங்களில் அதிகமாக வெள்ள நீரின் தாக்கத்திற்கு இப்பிரதேசம் உட்படுவதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கும் க’;டத்திற்கும் உட்படுவதை கருத்திற் கொண்ட நகரபிதா குறித்த பிரதேசத்தில் தேங்கும் நீர் வடிந்து செல்லும் வகையில் குறித்த வடிகான் அமைப்பதற்கான ஆரம்பகட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லினை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது நகரபிதா ஹில்மி மஹ்ருப் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து உரையாடியபோது, மிக நீண்ட காலமாக மழை காலங்களில் அதிகமாக மழை நீர் தேங்கி நின்று போக்குவரத்து மற்றும் சகலவிதமான அன்றாட நடவடிக்கைகள் பெருமளவு ஸ்தம்பிதமடையும் நிலை காணப்பட்டதோடு வெள்ளம் ஏற்படும் இடமாக அண்ணல் நகர் பிரதேசம் காணப்படுவதனால் இந்த வடிகான் அமைப்பு மக்களுக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் நகரபிதாவிடம் தெரிவித்ததோடு இவ்வசதிகளை ஏற்படுத்திக் தந்தமைக்காக நகரபிதாவுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

57 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள வடிகானுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ருப் முதலில் அடிக்கல் நாட்டிவைக்க அதனைத் தொடர்ந்து, நகரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஐ.எம்.ஜம்சித், முகாமைத்துவ உதவியாளரும் சமாதான நிதவானுமாகிய எம்.ஐ.நிஜாம்தீன், தொழிநுட்ப உத்தியோகத்தர் சசிதரன் ஆகியோரும் அடிக்கல் நாட்டிவைத்தனர். இதன்போது நகரசபை உத்தியோகத்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

a.k_5[1]

 

 

a.k_4[1]

Published by

Leave a comment