காத்தான்குடி மத்திய கல்லூரி சாதனை!

mmv central college kattankudy– KCC Media Unit

காத்தான்குடி: நடைபெற்று முடிந்த 2013 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையில் காத்தான்குடி மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)யின் 148 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இது இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் 62% ஆகும். இதில் 39 மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கும் ஏனைய உயர்கல்வி நிறுவகங்களுக்கும் தெரிவாகியுள்ள அதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகுமிடத்து இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியாகியுள்ள பெறுபேறுகளின்படி காத்தான்குடி மத்திய கல்லூரியிலிருந்து மருத்துவத் துறைக்கு – 03, பொறியியல் துறைக்கு – 04, உயிரியல், பெளதீகவியல்,விஞ்ஞானத் துறைக்கு- 15, வர்த்தக முகாமைத்துவத்துவ துறைக்கு – 13, கலைத்துறைக்கு – 04 எனும் அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர் என பாடசாலையின் அதிபர் கப்டன். அல்ஹாஜ் ULA முபாறக் தெரிவித்தார்.

மேலும் கடந்த உயர்தரப் பரீட்சையில் கணிதத் துறையில் தோற்றிய மாணவி VT. ஐனுல் ஃபஸீஹா மூன்று பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று (Z-புள்ளி 2.6802) மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 19வது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் காத்தான்குடி நகருக்கும் பெருமை தேடித்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் விசேட சித்திகளைப் பெற்று காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சாதனை படைக்க அர்ப்பணிப்புடன் பாடுபட்ட ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஒத்துழைப்பை வழங்கிய பெற்றோரையும், பாடசாலை நடவடிக்கைகளிற்கு பின் புலமாக இருந்து செயற்பட்ட பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம், பாடசாலை நலன் விரும்பிகள் முதலானோருக்கு அதிபர் கப்டன். அல்ஹாஜ் ULA முபாறக் அவர்கள் தனது நன்றியினையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

83 வருட காலமாக தனது கல்விச் செயற்பாட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தியில் அளப்பரிய பங்களிப்பினை வளங்கி வருவதோடு சாதனைகளையும் நிகழ்த்திவரும் காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யானது தொடர்ந்தும் தனது சாதனைப் பயணத்தில் தம்மோடு கைகோர்க்குமாறு நலன்விரும்பிகள். சமூக ஆர்வலர்கள், கல்வியியலாளர்களை வேண்டி நிற்கின்றது. என கல்லூரியன் அதிபர் தெரிவித்தார்.

 

Published by

Leave a comment