காத்தான்குடி: எமது ஊரின் மிக நீண்ட கால சவாலான திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக கழிவு சேகரிப்பு சேவை தொடர்பில் புதிய ஒழுங்குகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அதாவது, உக்கக் கூடிய கழிவுகள், உக்க முடியாத கழிவுகள் என வேறு பிரித்து கழிவு சேகரிப்பு சேவையினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இச் சேவைக்கென ஐரோப்பிய யூனியனின் மேலதிக நிதியுதவியுடன் இயங்கும் ‘யுநெப்ஸ்’ நிறுவனத்தின் ஊடாக இத்திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இச் செயற்திட்டத்தின் ஊடாக எமதூரின் திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காண்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.
எனவே, இச் செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பினை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
எஸ். எச். முஹம்மது அஸ்பர்,
நகர முதல்வர்,
நகர சபை,
காத்தான்குடி.
Published by

Leave a comment