காத்தான்குடியில் தற்பொழுது மழை

rainy[1]– AK77

காத்தான்குடி: காத்தான்குடி மற்றும் அண்மித்த பகுதிகளில் இன்றிரவு 10 மணியிலிருந்து மழை பெய்து வருகிறது. வழமையாக ஒவ்வொரு வருடமும் மாரி காலங்களில் அதாவது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்து வரும் மழை இவ்வருடத்தில் பெய்யாமையினால், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட காலநிலை  அண்மைக்காலமாக மாற்றமடைந்திருந்தது.

இதன்காரணமாக காலையிலும் மாலையிலும் குளிர் நிலவி வந்ததுடன், பகற்பொழுதுகளில் கடும் வெப்பமும் நிலவிவந்தது.

கடந்த இரு நாட்களாக மப்பும் மந்தாரமுமாக இருந்த ஊர் காலநிலை, தற்பொழுது குளிர் காற்றுடன்  மழையும் பெய்து வருகின்றது.

Published by

Leave a comment