எமது இணையத்தளம் இணையப் பாதையில் வலம் வந்து வருடங்கள் இரண்டை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04-02-2014 – இலங்கையின் தேசிய தினத்தன்று அடைய இருக்கின்றது.
கடந்த இரு வருடங்களிலும் அதிகமான வாசகர்கள் உலகில் பல நாடுகளிலிருந்தும் எமது இணையத்தளத்திற்கு வருகை தந்து எமக்கு ஆதரவுகளையும், ஒத்தாசைகளையும், மேலான கருத்துக்களையும் வழங்கி வருகின்றனர்.
உடனடி-அதிரடிசெய்திகள், காலத்தின் தேவைகள் – அவற்றின் தீர்வுகளுக்கான ஆக்கங்கள் மற்றும் விளையாட்டுச் செய்திகளை எமது உள்ளுர் மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுடன் தனிப்பாதையில் தனித்து நின்று வழங்கி வருவதுடன், காத்தான்குடியின் தகவல்களையும் செவ்வனே வழங்கிக் கொண்டு வருகின்றோம்.
எமது இணையத்தளத்தை மேலும் வடிவமைக்க எமது பங்கங்களுக்கு (PAGES) புத்தம் புது தகவல்கள் தேவைப்படுகின்றன. இதன்படி,
பள்ளிவாயல்கள், பொது நிறுவனங்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், சிறுவர் பாடசாலைகள் உட்பட எமது அனைத்து பக்கங்களுக்குமான நடப்பு விபரங்களை உரியவர்கள் எமக்கு அனுப்பி வைக்க முடியும்.
அவை மாத்திரமன்றி, தங்களது வியாபார நிலையங்களை விளம்பரப்படுத்த விரும்பும் சகோதரர்களும் தங்களது வியாபார நிலைய விபரங்களுடன் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வலைமனை வரலாற்றில் ஓர் தனிப்பாதையில் வலம் வந்துகொண்டிருக்கும் உங்கள் காத்தான்குடி இனையத்தளத்திற்கு தங்களது மேலான ஆலோசனைகளையும், ஆதரவுகளையும் இன்முகம் கொண்டு வரவேற்கின்றோம்.
சகல தொடர்புகளுக்கும் எமது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும்.
எமது தூய சமூக நோக்கத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்
நன்றி
என்றென்றும் அன்புடன்
இயக்குனர்,
உங்கள் காத்தான்குடி
Published by

Leave a comment