இந்திய குடியரசு தினத்தில் பாக். இராணுவம் தாக்குதல்

TOPSHOTS-PAKISTAN-INDIA-UNREST-TALIBAN– SHM

ஸ்ரீநகர்: இந்தியா குடியரசு தினத்தை கொண்டாடிய போது எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. இந்திய குடியரசு தினமான நேற்று காலை 6 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய துருப்புகளை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது.

இந்த தாக்குதல் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. ஆனால் எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இந்தியப் படைகள் பதிலடி கொடுக்கவில்லை என்று இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் அத்துமீறி நடந்த இந்த தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

Published by

Leave a comment