கொழும்பு: கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஆங்கிலப் பத்திரிகையான ஐலண்ட்டில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இஸ்ரேல் நாட்டுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதாக பிரசுரமான செய்தி தொடர்பில் விளக்கமொன்றை அளிப்பது பொருத்தமாகும்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரானுக்கே சென்றார்.
அவர் இஸ்ரேலுக்கு செல்லவில்லை. இந்த செய்தி தொடர்பில் ஐலண்ட் பத்திரிகையின் பிரதம ஆசிரியருடன் தொடர்பு கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்து வெளியான செய்தியின் சரியான தகவல்களை அவருக்கு தெரிவித்தோம்.
அதனடிப்படையில் அந்த செய்தி தொடர்பில் இம்மாதம் 23 ஆம் திகதி பிழைத்திருத்தத்தை அப்பத்திரிகை பிரசுரித்துள்ளது.அதில் அமைச்சர் இஸ்ரேலுக்கு செல்லவில்லை ஈரானுக்கே சென்றார் என்று குறிப்பிட்டுள்ளதை வாசகர்களின் கவனத்திற்கு தருகின்றோம்.
எஸ்.ஆர்.எம்.எம்.இர்ஷாத்
இணைப்பு செயலாளர்
கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சரின்
Published by

Leave a comment