2035ம் ஆண்டுக்குப் பின் ஏழை நாடுகளே இருக்காது.. பில் கேட்ஸ் நம்பிக்கை!

world– SHM

லண்டன்: 2035ம் ஆண்டுவாக்கில் உலகில் ஏழை நாடு என்று ஒன்றே இருக்காது என்று மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கணித்துள்ளார். அதேபோல சிறார்கள் இறப்பு விகிதமும் அந்த காலகட்டத்தில் மிக மிக குறைந்து போயிருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

கேட்ஸும், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் எழுதியுள்ள தங்களது வருடாந்திர கடிதத்தில் ஏழ்மை குறித்தும், அது ஒழியப் போவது குறித்தும் இப்படி கணிப்புடன் எழுதியுள்ளனர்.

ஆண்டுதோறும் தங்களது கேட்ஸ் பவுண்டேஷன் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், தான தர்மங்கள் குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் விளக்கி கடிதம் வெளியிடுவது கேட்ஸ் மற்றும் மெலிண்டாவின் வழக்கமாகும்.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான கடிதத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் இத்திட்டத்தின்படி 2035ம் ஆண்டளவில் உலகில் வறுமை நாடுகள் இருக்காது என திட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Published by

Leave a comment