ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் கிண்ணியா நகரபிதாவுக்கிடையிலான விசேட சந்திப்பு

unnamedரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபை முகம்கொடுத்து வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் மற்றும் தேவைகள் சம்பந்தமான கலந்துரையாடலுக்கான அழைப்பை ஏற்று இன்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் கிண்ணியா நகரசபை கேட்போர் கூடத்தில் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன்போது, கிண்ணியா பிரதேசத்தில் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், தேவைகள் சம்பந்தமாக நகரபிதா பிரதிநிதிகளிடம் விளக்கியதோடு கிண்ணியா வரைபடத்துடனான விளக்கத்தினையும் வழங்கினார். பிரதிநிதிகள் திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாக கிண்ணியா நகரசபை முன்னெடுக்கும் நடவடிக்கை பற்றி கேட்டபோது ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளிடம் அதற்கான விளக்கத்தினையும் இன்னும் நகரசபையின் தேவையாகவுள்ள பல கோரிக்கைகளையும் நகரபிதா முன்வைத்தார்.

அத்தோடு கிண்ணியாவில் அத்தியவசிய தேவையாக காணப்படும் பேரூந்து நிலையம் அமைத்துத் தருவதற்கான கோரிக்கையினையும் இங்குள்ள பிரதான வீதியினை காபட் வீதியாக அமைக்கவும்அத்தோடு ஹிஜ்ரா வீதி, குட்டிக்கராச்சி ஆலங்கேணி வரையான வீதியினையும் காபட் வீதியாக அமைப்பதற்கான கோரிக்கையினையும் இப்பிரதிநிதிகளிடம் தெரிவித்த நகரபிதா ஹில்மி மஹ்ரூப் முக்கியமாக கிண்ணியா பிரதேசம் மழைக்காலங்களில் காட்டு வெள்ளத்தின் தாக்கத்திற்கு உட்படுவதாலும் மழைநீரின் வெள்ளத்திற்கு உட்படும் அபாயம் அதிகமாகவுள்ளதனால் அதற்கான வடிகான் அமைக்கும் கோரிக்கையினையும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்ததோடு காட்டு வெள்ள தடுப்புக்காக தடுப்புச் சுவர் கட்ட வேண்டியதற்கான அவசியத்தையும் கிண்ணியாவின் வரைபடத்துடன் குறித்துக் காட்டி தெளிவுபடுத்தினார்.

unnamed (1)

அதனைத் தொடர்ந்து பிரதிநிதிகளிடம் மழைக்காலங்களில் அதிகரிக்கும் நீரினால் குறிஞ்சாக்கேணி பாலம் மற்றும் குட்டிக்கராச்சி பாலம் இரண்டும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதால் அச்சத்துடனும் உயிர் ஆபத்துடனும் பிரயாணம் செய்யும் நிலையினையும் எடுத்துரைத்த நகரபிதா இவ்வாரான விடயங்களை மனதில் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் அதற்கான உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு நகரபிதா ஹில்மி மஹ்ரூப் கேட்டுக்கொண்டதற்கு இனங்க குறித்த விடயங்களை ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு சமர்ப்பிப்பதாகவும் நடவடிக்கைக்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கிண்ணியா நகரபிதா ஹில்மி மஹ்ரூபிடம் தெரிவித்தனர்.

இதன் போது நகரபிதா ஹில்மி மஹ்ரூப், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், Environment Consultant , Environment Specialist, திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்திட்ட அதிகாரி மற்றும் நகரசபை முக்கிய உத்தியோகத்தர்களும் இதன் போது கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment