தொடரை சமப்படுத்தியது பாகிஸ்தான்

CRICKET-UAE-PAK-SRI– MJ

சார்ஜா: நேற்று சார்ஜா மைதானத்தில்  இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 1:1 என்ற ரீதியில்  சமன் செய்தது.

பாகிஸ்தான் சார்பாக அஸார் அலி 103 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஐந்தாம் நாளான நேற்று, ஆரம்பத்தில் வெற்றி இலக்கு இலங்கையின் பக்கம் இருந்த போதிலும், அணியின் தலைவர் மிஸ்பாஉல் ஹக் மற்றம் சப்றாஸ் அகமட் ஆகியோரின் விரைவான ஓட்டங்களால் போட்டியின் வெற்றி பாகிஸ்தானுக்கு சென்றது.

போட்டியின் நாயகனாக அஸார் அலியும் தொடரின் நாயகனாக அன்ஜலோ மெத்தியூசும் தெரிவு செய்யப்பட்டனர்.

CRICKET-UAE-PAK-SRI

Published by

Leave a comment