கிண்ணியாவில் பெண்களுக்கான தனி நூலகம் அமைக்க கிண்ணியா நகரபிதா ஹில்மி முயற்சி!

unnamed (2)ரைஸ்

கிண்ணியா: சவுதி அரேபியா தனவந்தகர்களின் கிண்ணியா விஜயத்தின் போது அவர்களை நகரபிதா சந்திப்பதற்கான ஏற்பாடுகளை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க மௌலவி எம்.ஏ.எம். ரபீஸ் மதனி ஏற்பாடு செய்த சந்திப்பு நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் சவுதி அரேபிய தனவந்தகர்களிடம் கிண்ணியாவுக்;கு தேவையாகவுள்ள பல தேவைகளை தெரிவித்ததோடு சவுதி அரேபியாவினால் கிண்ணியாவுக்காக அமைத்துக் கொடுக்கப்பட்ட கிண்ணியா பாலத்திற்கு நன்றிகளையும் கிண்ணியா மக்கள் சார்பாக நகரபிதா தெரிவித்தார்.

இதன் போது நகரபிதா கிண்ணியாவில் பெண்களுக்கான தனி நூலகம், பெண்களின் தனி தொழுகைகான அமைப்பு அதனோடு இணைந்ததான மாநாட்டு மண்டபத்தின் தேவைகளையும் தெளிவுபடுத்தியதோடு அவற்றை அமைப்பதற்கான உதவிகளையும் எதிர்காலத்தில் செய்து தருவதற்கான கோரிக்கையினையும் முன்வைத்தார். இந்த நூலகத்தினூடாக பெண்களின் கல்வி, கலாச்சார, மத அறிவு வளர்ச்சியடைவதோடு சகலவிதமான ஆன்மீக கல்வியும் வளர்ச்சியடைவதும் இன்றியமையாது காணப்படுமெனும் யதார்த்தத்தை விளக்கிய நகரபிதா ஹல்மி மஹ்ரூப் இந்த நுலகத்தினை முழுக்க முழுக்க பெண்களே நிர்வகிக்கக் கூடியதாக இருக்கமெனவும் தெரிவித்தார்.

சந்திப்பினைத் தொடர்ந்து நகரபிதா ஹில்மி மஹ்ரூபினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் மிக முக்கியமானதாக விளங்கும் கட்டையாறு பொது பூங்காவினையும் அவர்கள் பார்வையிட்டனர். இதன் போது சவுதி அரேபிய தனவந்தகர்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பூங்காவினையும் அங்க நாட்டப்பட்டிருக்கம் ஈச்ச மரங்களையும் பாராட்டியதோடு நகரபிதா முன்வைத்த கோரிக்கைகளை முழுமனதுடன் எதிர்காலத்தில் செய்து தருவதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர். இத்தோடு கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் தொடர்புகள் தொடர்ந்தும் இருக்குமென அவர்கள் தெரிவித்தனர். இதன் போது மௌலவி ரபீஸ், மௌலவி ஹபீபுள்ளா, மவ்ஜூத் ஆசிரியர், நிஜாம்தீன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment