கொழும்பு: வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று வலுவடைந்துள்ளதால் கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள் ளதாகவும் இக்காலநிலை பெப்ரவரி வரை தொடரும் எனவும் வானிலை அவதான நிலைய அதிகாரி சூரியகுமாரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் காலை கிழக்கில் மழை செய்ததுடன், மாலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் பனியும் அதிகமான குளிரும் நிலவுகின்றது. இந்நிலை வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று வலுவடைந்ததன் பிரதிபலிப்பே எனவும் அவர் கூறினார்.
தொடரும் காலநிலை மாற்றம் தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,
நுவரெலியா மாவட்டத்தில் இக்காலகட்டங்களில் குளிர் அதிகரித் துள்ளதுடன், கடும் பனி பெய்வதையும் காண முடிகின்றது. வெப்பநிலை குறைவடைந்து வருகின் றமையே அதற்குக் காரணமாகும்.
வடகிழக்கு பருவ பெயர்ச்சிக் காற்று வலுவடைந்துள்ளதன் காரணமாக இக்காலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மழை பெய்யும், அத்துடன் மாலை வேளைகளில் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த காலநிலை எதிர்வரும் பெப்ரவரி வரை தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Published by
![rainy[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/rainy1.jpg?w=146&h=150)
Leave a comment