காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இளைஞர் பாராளுமன்றத்தின் சகவாழ்வு பிரதியமைச்சர் ஏ.எல்.எம்.றிசான் 11-01-2014 நேற்று சனிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் காத்தான்குடி பிராந்திய காரியாலயத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது சாய்ந்தமருது – மாளிகைக்காடு மக்களின் இரண்டுவருடகால தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படும் ஜனாஸா வாகனம் ஒன்றை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு பெற்றுக்கொடுக்க எழுத்துமூலம் அறிக்கை ஒன்றை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் சமர்ப்பித்து , அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மன ஆதங்கத்தை இச்சந்திப்பின்போது தெரிவித்ததுடன் கல்முனை தொகுதி மக்களுக்கு சேவையாற்ற என்றும் தயாரக இருக்கின்றேன். கல்முனைத் தொகுதியிலுள்ள அரசியல் வாதிகளில் சிலர் தான் வந்து சேவையாற்றுவதில் விருப்பமின்மையினையும் சில தடைகளையும் விதிக்கின்றார்கள். இதனால் கல்முனைத் தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவது மிகக் கடினமான காரியமாக அமைகின்றது. அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை வேலை திட்டத்தின் அடிப்படையில் கிராமங்கள் தொடக்கம் பாரிய அபிவிருத்தியடைந்து வரும் இக்கால கால கட்டத்தில் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி அடையாமல் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கபடாமல் தேங்கிக்கிடப்பதைக் கண்டு மனவேதனை அடைகின்றேன்’ எனவும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும். சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் கருத்துத் தெரிவிக்கையில் ‘செய்கின்றார்களுமில்லை செய்யவிடுகிறார்களுமில்லை.’ எமது பிரதேச்திற்கு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை தடுக்காமல் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக சேவையாற்றவிட்டாலும் பராவாயில்லை சேவையாற்ற வருவோர்களை தடுக்காதீர்கள்’ எனவும் தெரிவித்தார்.
Published by


Leave a comment