கல்வி சுகாதாரத்துறைகளில் புத்தளம் மாவட்டம் முன்னேற வேண்டும்

IMG_20140111_125747– இர்ஷாத் றஹ்மத்துல்லா

புத்தளம்: வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தின் கல்வி நிலை பின்னடைவில் உள்ளதாகவும், இதற்கு பிரதான காரணமாக தமிழ் மொழி மூல ஆசிரியர்களுக்கு காணப்படும் பற்றாக்குறையே ஆகும் என்றும் அதனை நிவர்த்திக்க கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் உயர் சித்திகளை பெற்றவர்களை உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று (2014.01.11)புத்தளத்தில் தெரிவித்தார்.

புத்தளம் தள வைத்தியசாலையில் ஹோல்சிம் சீமெந்து நிறுவனத்தின் 35 இலட்சம் ரூபா செலவில் அமையவுள்ள நோயர்களை உள்வாங்கும் புதிய கட்டிட தொகுதியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஹோல்சிம் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் பிலிப் றிச்சர்ட்இவடமேல் மாகாண சுகாதார அமைச்சர் டீ.பி.ஹேரத்இவடமேல் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.நியாஸ்இஎன.ரீ.தாஹிர்இகிங்ஸ்லி லால் பெர்ணான்டோஇசின்தக மாயாதுன்னஇபுத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ்இமுன்னால் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எச்.எம்.நவவி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் வடமேல் மாகாண முதலமைச்சர் பேசுகையில் –

வடமேல் மாகாணம் என்பது புத்தளம், குருநாகல் மாவட்டங்களை கொண்டது.ஆனால் குருநாகல் மாவட்டம் மட்டும் எல்லா துறைகளிலும் அபிவிருத்தி கண்டுவந்தால், வடமேல் மாகாணத்தை குருநாகல் மாவட்டம் என்று மட்டுமே அழைக்க  வேண்டும்.ஆனால் அதனை செய்ய முடியாது.குருநாகல் மாவட்டத்தை போன்று கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட எல்லா துறைகளையும் புத்தளம் மாவட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும்.

நான் மாகாண சபை அதிகாரத்தை பொறுப்பெடுத்த பின்னர் பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்த ஆரம்பித்துள்ளேன்.குறிப்பாக மக்கள் சமூக நலன் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்துள்ளேன்.எனது இலக்கு 300 திட்டங்களை நடை முறைப்படுத்துவது அதில் தற்போது 3 திட்டங்கள் வெற்றிகரமாக ஆரம்பிக்கபப்பட்டுள்ளன.

சுகாதாரத்தை போன்று கல்விக்கும் முன்னுரிமையளித்துள்ளேன்.ஆங்கில முன்மாதிரி பாடசாலைகள் பலவற்றை ஆரம்பிப்பதும் எனது இலட்சியத்தில் ஒன்றாகும்.மாகாண மட்டத்திலிருந்து தேசிய உற்பத்திக்கு 10 சதவீதம் பங்களிப்பு செய்யப்படுகின்றது.அதனை 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்.இவற்றை ஏற்படுத்த மாவட்டத்தில் புதிய தொழில் உற்பத்திகள் ஏற்படுத்த வேண்டும்.அதற்கு முதலீட்டாளர்கள் வரவேண்டும்.அதனை கொண்டுவர சகலரும் தமது பங்களிப்புக்களை செய்ய வேண்டும்.

அண்மையில் ஆயிரக்கணக்கான மருத்துவ தாதியர்களுக்கான நியமனங்கள் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டன..அனால் எமது வடமேல் மாகாணத்துக்கு 20 பேரே நியமிக்கப்ட்டனர்.இது போதுமானதாக இல்லை.அதே வேளை தற்போது பணியிலுள்ள ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளாக 1700 மில்லியன் வழங்கப்படுகின்றது.
ஹோல்ஸிம் நிறுவனம் இன்னும் பல புதிய திட்ங்களை புத்தளம் மாவட்ட்த்தில் ஆரம்பிக்கவுள்ளது.அதனை நாம் வரவேற்கின்றோம்.என்றும் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

IMG_20140111_125718

IMG_20140111_125747

Published by

Leave a comment