வரி செலுத்தாத வர்த்தகர்களை கண்டுபிடிக்க பரந்துபட்ட கணிப்பீடு

business100 கோடி ரூபாவை திரட்ட உள்நாட்டு இறைவரி திணைக்களம் திட்டம்

கொழும்பு: வரி செலுத்தாமல் ஏமாற்றி வரும் வர்த்தகர்களை கண்டுபிடிப்பதற்காக கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பரந்துபட்ட கணிப்பீடொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தேசிய இறைவரித் திணைக்களம் தெரிவித்தது.

இதனூடாக, வர்த்தகர்களிடம் இருந்து 100 கோடி ரூபா திரட்ட திட்ட மிட்டிருப்பதாக தேசிய இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் மல்லிகா சமர சேகர  தெரிவித்தார்.

சுமுகமான முறையிலே வரி செலுத்தாத வர்த்தகர்களிடம் இருந்து வரி அறவிட நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறிய அவர் வரி செலுத்த மறுப்பவர்களிடமே தண்டம் அறவிட இருப்பதாகவும் குறிப்பிட்டார். நாட்டிலுள்ள 50 வீதமான வியாபார நிறுவனங்கள் கொழும்பிலும் அண்மித்த பகுதியிலும் உள்ளன.

இதனால், வரி செலுத்தாது ஏமாற்றிவரும் வர்த்தகர்களி டமிருந்து வரி அறவிடுவதற்காக ஆய்வொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டு ள்ளது. வியாபார நடவடிக்கைகளை முடக்கி வியாபாரிகளிடமிருந்து வரி அறவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்ட அவர், 50 ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறும் அரச மற்றும் தனியார் உத்தியோகஸ்தர்களிடமிருந்து வருமான வரி அறவிடும் நடவடிக்கையையும் இந்த வருடத்தில் கடுமையாக முன்னெடுக்க இருப்பதாக கூறினார். தனியார் துறையிலே 50 ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் உள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்தினூடாக 50 ஆயிரம் ரூபா பெறுவோர் வருமானவரி செலுத்த வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அநேகர் வருமானவரி செலுத்தாமல் இருப்பதாக கூறிய அவர் இந்த வருடத்தில் கூடுதலானவர்களிடம் வருமானவரி திட்டம் இருப்பதாக ஆணையாளர் நாயகம் கூறினார்.

கடந்த வருடம் இவ்வாறு மேற்கொண்ட கணிப்பீடு மூலம் 50 மில்லியன் ரூபா வரி அறவிடப்பட்டது. இது தவிர 600 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரதான நகரங்களிலும் இவ்வாறு கணிப்பீடு நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.

– தினகரன்

Published by

Leave a comment