யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் பழைய சந்தை வளாகத்தில் முஸ்லிம் நடைபாதை வியாபாரிகளுக்கென 2013ம் ஆண்டு மே மாதத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட 29 தற்காலிக கடைகள் நேற்று அகற்றப்பட்டன.
யாழ்இ மாநகரசபை உறுப்பினர் மௌலவி சுபியான் அவர்களின் ஊடாக மேற்படிக் கடைகளுக்கென ஒவ்வொருவரும் 35இ000 ரூபாவினை மாநகர சபைக்கு செலுத்தியுள்ளதுடன் நாள் வாடகை 100 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதனடிப்படையில் கடந்த 2013 மே மாதம் 23ம் திகதி கடைகள் யாழ் மாவட்ட அபிவிருதிக்குழுத் தலைவரும் அமைச்சருமாகிய கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் உரிமையாளர்களுக்கு வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.
முஸ்லிம் வியாபாரிகளும் தம்து வியாபார நடவடிக்கைகளை அங்கே ஆரம்பித்திருந்தனர், குறித்த 29 கடைகளும் அமைந்திருந்த பிரதேசம் மிகவும் நெருக்கமான பிரதேசம் என்பதாலும், காற்றோட்டம் இல்லாத, மக்களின் பார்வைக்குத் தூரமான இடம் என்பதாலும் வியாபார நடவடிக்கைகள் சீராக இடம்பெறவில்லை என வர்த்தகர்கள் குறைபாடுகள் குறித்து கருத்துக்களை வெளியிட்டனர். இந்நிலையில் குறித்த 29 கடைத்தொகுதிகளில் வியாபாரம் மேற்கொள்வதில் இருந்தும் வியாபாரிகள் ஒதுங்கிக்கொண்டார்கள், 6 கடைகள் மாத்திரமே இயங்கிவந்தன. இந்நிலையில் குறித்த கடைத்தொகுதிக்கான நாளாந்த குத்தகை நிலுவை பல இலட்சங்களாக உயர்வுற்றது.
மேற்படி நிலைமைகளை மதிப்பீடு செய்த யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் மற்றும் ஷரபுல் அனாம் ஆகியோருக்கும் கௌரவ அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பை நடாத்தி குறித்த கடைத்தொகுதியினை உடனடியாக அகற்றுதல் என்று தீர்மானித்து முன்னறிவித்தல் விடப்பட்டு கடைகள் நேற்று (9.1.2014) அகற்றப்பட்டன.
இந்நிலையில் இது குறித்து முஸ்லிம் வர்த்தகள், ‘குறித்த கடைகளில் நாம் பல இலட்சம் ரூபாய்களை முதலீடாக இட்டிருக்கின்றோம், ஆனால் மாநகரசபையும் மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்களும் எமக்கு மாற்று வழிகளை ஏற்படுத்தித்தராமல் எமது பணத்தை அறவிட்டு விட்டு இன்று எம்மை நடுத்தெருவில் நிறுத்தியிருக்கின்றார்கள்’ என்று கவலை வெளியிட்டார்கள்.
Published by




Leave a comment