வலுவான நிலையில் இலங்கை அணி

mahela– MJ

டுபாய்: டுபாயில் இடம்பெறும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவின்படி, இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து, 318 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி இலங்கை 153 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 165 ஓட்டங்களுக்குள் இலங்கை அணியால் சுருட்டப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அணி நிதானமாகவும், ஸ்திரமாகவும் துடுப்பெடுத்தாடிவரும் இந்நிலையில், இன்றைய ஆட்ட முடிவில் 350க்கு மேற்பட்ட ஓட்ட இலக்கை இலங்கை அணி, பாகிஸ்தான் அணிக்கு வழங்குமாயின் இப்போட்டியில் இலங்கை வெற்றிபெறும் வாய்ப்புக்கள் இலகுவாக இருக்கின்றன.

mahela
மஹேல ஜயவர்த்தன

நீண்ட நாட்களின் பின்னர் அணிக்குத் திரும்பிய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்த்தன சததத்தைப் பெற்றதுடன், தனது கண்ணிச் சதத்தை கௌசல் சில்வா தவறவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Published by

Leave a comment