சாவகச்சேரி: வடக்கில் சாவகச்சேரி, மல்லாகம், ஊர்காவற்றுறை புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதிகள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியமைச்சரும், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோரால் வியாழக்கிழமை (09) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிரி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரசேகரன், மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment