காத்தான்குடி: மட்டு-மாவட்டத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து பிரதேச செயலகங்கள் தோறும் பொது மக்களை சந்தித்து அவர்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கிழக்கு மாகாணக் காணி ஆணையாளரிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த வேண்டுகோளுக்கமைய முதலாவது காணி நடமாடும் சேவை இன்று 09-01-2013 வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.
இக்காணி நடமாடும் சேவையில் நீண்ட காலமாக தீரக்கப்படாத 65 காணிப் பிணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மாகாணக் காணி ஆணையாளர் தமது உரையில் தெரிவித்தார்.
இங்கு பல்வேறுபட்ட காணிப் பிரச்சினைகள் தீரத்துவைக்கப்பட்டது.
இந் நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் ‘ மெவன் தர்மசேன ,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் ,காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கருநாகரன் உட்பட அரச அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.இதில் பெரும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு காணி தொடர்பான சேவைகளை பெற்றுக் கொண்டனர்.
Published by




Leave a comment