தொழிற் கல்வியின் முக்கியத்துவத்தினை எமது இளம் சமூகம் ஏன் சிந்திக்கக் கூடாது?

ncn– ஓர் சிறப்புக்கட்டுரை

இன்றைய உலகில் பாடசாலை கல்வியிற்கு அப்பால் தொழிற் கல்வியினை ((Professional Qualification)) மாணவர்கள் பெற வேண்டியது அத்தியவசியமானது அது அவர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பததோடு சிறந்த எதிர்காலத்தினையும் பெற்றுக் கொடுக்கும்.

இந்த வகையில் இன்று ஏராளமான தொழிற் கல்வி வாய்ப்பினை தனியார் கல்வி நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் வழங்கி வருகின்ற போதிலும்    பணச் செலவில்  படிக்க கூடிய பெறுமதியான, எங்களுக்கு தெரியாத ஏராளமான பயிற்ச்சி நெறிகள் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகள் தோறும் காணப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக வந்தாறுமூலை,(கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் அமைந்துள்ள) தொழில் பயிற்ச்சி நிலையத்தில் ஏராளமான பயிற்ச்சி நெறிகள் காணப்படுகின்றன.

அங்கு காணப்படும் Computer Numerical Control (CNC)  பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். இந்த பயிற்ச்சி நெறி இலங்கையில் இரண்டு இடங்களில் மாத்திரமே பயிற்ச்சிகளுடன் (Practical) காணப்படுகின்றது. ஒன்று கொழும்பிலும் அடுத்தது வந்தாறுமூலையிலும் காணப்படுகின்றது. German Tech போன்ற  முன்னனி தொழில் பயிற்ச்சி  நிறுவணங்களில் கூட இங்கு காணப்படும்  பயிற்சிகளுடன் கூடிய வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ncn
வந்தாருமூலை தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள Computer Numerical Control

இந்த பயிற்ச்சி நெறியினை பூர்த்தி செய்துள்ள முதலாவது  தொகுதியினைச் (Batch) சேர்ந்த அனைத்து பிரிவினரும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தகவலையத்தில் சுமார் ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட சம்பளத்தில் வேலைக்கு சேர்கப்பட்டுள்ளர் என்பது இப்பயிற்ச்சி நெறியின் முக்கியத்துவத்தினை உணர்த்துகின்றது.
 
அத்துடன் தனியார் நிறுவனங்களில் பெரும் தொகை பணத்தினை செலவழித்து, கல்வி கற்று  வெளிநாட்டு வேலைவாய்ப்பினை நாடிச் செல்லும் எமது இளைஞர்களுக்கு எமது காலடியிலேயே சிறு தொகை பணம் செலவளித்து அல்லது இலவசமாக  படிக்க கூடிய பாடநெறிகள்கள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் இருப்பது துர்பாக்கியமான ஒரு  நிலையாகும்.

அத்துடன் எமது அயல் நாடான இந்தியாவில் இந்த CNC பயிற்ச்சி நெறியினை மூன்று மாத காலத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு 5 இலட்சம் இந்திய ரூபா தேவைப்படுகின்றது.

ncn1
வந்தாருமூலை தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள Computer Numerical Control

எனவே  இவ்வாறான சந்தர்ப்பத்தினை பயன்படுத்துவதற்கு எமது இளைஞர்கள் முன்வருவதோடு இது தொடர்பான தகவல்களை மற்றும் தொழில் பயிற்ச்சி   நெறிகள் பற்றிய விபரத்தினை அறிய விரும்பினால் பிரதேச செயலகத்தில் காணப்படும் தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறு  கேட்கப்படுகின்றனர்.

ncn 2
பாடநெறிகள்: பெரிதாக்கிப் பார்க்கவும்

– MTM. அஸ்மி தாஜூதீன்

(மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலகம்,காத்தான்குடி)

Published by

Leave a comment