ஜனாதிபதி நேற்று இஸ்ரேல் விஜயம்; பிரதமர் நெதன்யாகுவுடன் சந்திப்பு

SL_Israel[1]கொழும்பு: மத்திய கிழக்கிற்கான விஜயத்தின் நிறைவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக்காலை இஸ்ரேல் சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடுகளிற்கான விஜயத்தில் இரண்டு நாட்களை ஜோர்தானில் கழித்த ஜனாதிபதி நேற்று பெத்லகேமிலிருது ஜெருசலேமை வந்தடைந்தார்.

நேற்றைய தினம் அங்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்த ஜனாதிபதி இரு தரப்புப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளார். அதனையடுத்து ஜெருசலேம் புராதன நகரத்திலுள்ள புகழ்பெற்ற மதத் தலங்களுக்குச் சென்று பார் வையிட்டார்.

இன்றைய தினம் இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சந்திப்பதுடன் தமது இஸ்ரேல் விஜயத்தின் ஞாபகார்த்தமாக மரக்கன்றொன்றையும் நடவுள்ளார். அதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் வர்த்தகத் தூதுக் குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

மேற்படி நிகழ்வுகளில் ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் இலங்கைத் தூதுக் குழுவினரும் பங்கேற்றனர். மத்திய கிழக்கிற்கான இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ்குணவர்தன, கமலா ரணதுங்க, ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.TK

Published by

Leave a comment