அவுஸ்திரேலியாவில் இடம்பெறும்- ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ் கடற் பாசறை மகாநாடு

2dp– பழுலுல்லாஹ் பர்ஹான்

சிட்னி: அவுஸ்திரேலியா நாட்டு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 11 உலக நாடுகளில் இருந்து சுமார் 400 மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ள ஐ.சி.சி. 2014 சர்வதேச சென் ஜோன்ஸ்; கடெற் பாசறை மகாநாடு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி தொடக்கம் இன்று வரை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாக இலங்கையிலிருந்து அம் மகாநாட்டில் கலந்து கொண்டுள்ள சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிபு தெரிவித்தார்.

கனடா,இங்கிலாந்து,ஹொங்கோங்,மலேசியா,நியூஸ்லாந்,சிங்கபூர், சாலமன் தீவுகள்,சௌத்தாபிரிக்கா,இலங்கை,வேல்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய 11 உலக நாடுகள் பங்குகொள்ளும் இம்மகாநாடு 2014 ஜனவரி 11 திகதி வரை நிறைவு பெறும்.

இங்கு பல்வேறு வகையான முதலுதவி பயிற்ச்சிகள் வழங்குவது தொடர்பான பயிற்ச்சிகள் இடம்பெற்ற வருகின்றன.

இதில் இலங்கையிலிருந்து சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிப், சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் கொழும்பு மாவட்ட ஆணையாளர் சரத் தயானந்தா, சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் குருநாகல் மாவட்ட உதவி ஆணையாளர் மல்லிகா ஹேரத் உட்பட 15,16,17,18 வயது சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவன உறுப்பினர்கள் பெற்றோர்கள் என 22 பேர் குழுவாக கலந்து கொண்டுள்ளனர்.

3dp

2dp

Published by

Leave a comment