விமானத்தில் இருந்து உடலுறுப்பு விழுந்ததால் பதட்டம்: ஜித்தாவில் சம்பவம்!
– MJ
ஜித்தா: சவூதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் யாராவது சிக்கியிருக்கலாம். அவரின் உடல் உறுப்புகளே கீழே விழுந்திருக்கலாம் என்று பொலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜித்தா நகரின் மேலாக விமானம் பறந்தபோது இந்த உடல் உறுப்புகள் கீழே விழுந்தன.
இதுகுறித்து பொலீஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் அல் போக் கூறுகையில்,
‘நேற்று முன், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம்’ என்றார்.
‘விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள் விழுந்ததாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறி விரைவது சவூதி விமான நிலையங்களில் வழக்கமாக உள்ளது’.
ஜித்தா நகர் வரைபடம்
‘இங்குள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது மிகவும் உன்னிப்பானதாக இல்லை என்பதும், சனநெரிசல்கள் அதிகமாக உள்ளதால் விமானங்களைத் தனித்தனியாக அவதானிப்பது முடியாமல் இருக்கிறது. இப்படிச் செல்வோரில் பலர் விமானத்தின் லேன்டிங் பகுதி வழியாக சிரமப்பட்டு விமானத்திற்குள் ஏறுவதும் அங்கு சகஜமாகும். இதில் பலர் அடிபட்டு இறக்கிறார்கள்’ எனவும் அவர் கூறினார்.
இதற்கு முன்னர் இதுபோன்ற சம்பவம் றியாத் நகரில் இடம்பெற்றது. 2010ம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. விமானத்திலிருந்து உடற்பாகங்கள் கீழே விழுந்ததையடுத்து, றியாத் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், குறித்த உடற்பாகங்கள் ‘லேண்டிங் கியர்’ தொழிநுட்பவியலாளர் ஒருவருடையது என தெரிய வந்தது.
தற்பொழுது ஜித்தாவில் இடம்பெற்றிருக்கும் இச்சம்பவம் ஒருவேளை இவ்வாறான தொழிநுட்பவியலாளரின் உடலாகவும் இருக்கலாம் எனவும் மேலும் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் பற்றி தற்பொழுது ஜித்தா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment