கொழும்பு: 2013 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப் பகுதியில் குடிவரவு – குடியகல்வு திணைக்களம் 4 இலட்சத்து 97 ஆயிரத்து 642 கடவுச் சீட்டுகளை விநியோகித்துள்ளதாக திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
கொழும்பு பிரதான அலுவலகத்தின் ஊடாகவும் மாத்தறை, கண்டி, வவுனியா, பிராந்திய அலுவலகங்களினூடாகவும் இவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2 இலட்சத்து 83 ஆயிரத்து 25 சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டுகளும் 2 இலட்சத்து 14 ஆயிரத்து 617 மத்திய கிழக்கு நாடுகளுக்குமான கடவுச் சீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலுள்ள பிரதான அலுவலகமூடாக 2 இலட்சத்து 33, 731 சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டுகளும், ஒரு இலட்சத்து 96,277 மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மாத்தறை பிராந்திய அலுவலகத்திலிருந்து 11,332 சகல நாடுகளுக்குமான கடவுச் சீட்டுகளும், 2,555 மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச் சீட்டுகளும், கண்டி அலுவலகத்திலிருந்து 24,873 சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகளும் 10,243 மத்திய கிழக்கு நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகளும் வவுனியா பிராந்திய அலுவலகத்திலிருந்து 13,039 சகல நாடுகள் கடவுச் சீட்டுகளும், 5,542 மத்திய கிழக்கு நாடுகள் கடவுச்சீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் சூலானந்த பெரேரா தெரிவித்தார்.TK
Published by

Leave a comment