சென்னை: ‘இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்’ என்று இந்திய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
‘இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நிறுத்தவில்லை. இலங்கை அரசாங்கமும் பிரபாகரனும் ஒரே பிடிவாதத்துடன் போராடினார்கள். போரை நிறுத்த இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொள்ளவில்லை’.
‘இந்திய அரசாங்கம் போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம் சொல்லியும் கடைசிவரை ஒத்துக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்’.
என்பதாக தழிழக தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் கூறியிருந்தார் ப.சிதம்பரம்.
Published by

Leave a comment