சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் வறிய,பெற்றோரை இழந்த 428 தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு

DSC_7395– பழுலுல்லாஹ் பர்ஹான்
 
காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் 29 வது சமூகத்தை நோயக்கிய பயணத்தில் ஓர் அங்கமாக வருடாந்த தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வு 06-01-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
 
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸூக்கு பதிலாக மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எஸ்.ரங்கநாதன் கலந்து கொண்டார்.
 
இதன் போது வறிய,பெற்றோரை இழந்த 428 தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு அதிதிகளினால் புத்தகப்பை வழங்கிவைக்கப்பட்டதுடன் நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
 
இங்கு வலதுகுறைந்த மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
 
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர்,காத்தான்குடிப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் , அம்பாறை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அன்சார், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைத் தலைவர்        ரி. வசந்தராசா,சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான்,
இ.செ.ச. மட்டு. மாவட்டக் கிளையின் உப தலைவரும் காத்தான்குடி கிளையின் தலைவருமான எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ், காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளரும்,சிரேஷ் ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி),தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் மன்சூர்,ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் எம்.எச்.ஜிப்ரி மதனி, சம்மேளன செயலாளர் றமீஸ் ஜமாலி, மத்தியஸ்த சபைத் தலைவர் உசனார் ஜேபி, ஓ.எஸ்.ஏ. அமப்பின் பொருளாளர் தாஹிர் ஜேபி மற்றும் பள்ளிவாயல்களின் தலைவர்கள் ,ஊர் பிரமுகர்கள் ,பொது நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment