இந்தியாவின் ‘ஜிஎஸ்எல்வி டி 5’ வெற்றிகரமாக ஏவப்பட்டது!

rocket– M16
ஸ்ரீஹரிகோட்டா: 2010ம் ஆண்டு இரண்டு முறை தோல்வியடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதுமான ‘ஜிஎஸ்எல்வி டி5’ ரொக்கட் நேற்று மாலை 4.18 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ரொக்கட் ஏவுதல் முழுமையான வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
ஜி.எஸ்.எல்.வி டி5 ரொக்கெட்டின் அனைத்து நிலைகளும் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்துப் பிரிந்தன. குறிப்பாக முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் சிறப்பாக செயல்பட்டு கடைசியில், ரொக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த ஜிசாட் 14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
 முன்னதாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி. டி5. 50 மீட்டர் உயரமும், 415 டன் எடை கொண்டதும் இது. அதாவது 80 பெரிய  யானைகளின் எடைக்குச் சமமானதாகும்.
இதை நிறுத்தி வைத்தால் அது 17 மாடிக் கட்டடத்தின் உயரத்திற்கு வரும். மூன்று அடுக்குகளைக் கொண்ட ரொக்கெட், ரூ. 350 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
2வது முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை ஜிஎஸ்எல்விக்காக பயன்படுத்தியுள்ளது இந்தியா என்பது முக்கியமானது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதியே இது ஏவப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏவுவதற்கு 74 நிமிடங்களுக்கு முன்பு எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டு விட்டது.

Published by

Leave a comment