சிட்னி: தற்பொழுது நிறைவடைந்திருக்கும் ஏஸஸ் கிண்ணத்தொடரில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தை 5:0 எனும் வெற்றி இலக்கில் வைட்வோஸ் செய்து, ஏஸஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் 2006-07 காலப்பகுதியின் பின்னர் முதற்தடவையாக அவுஸ்திரேலியா ஏஸஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த வருடம் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஏஸஸ் தொடரில், இங்கிலாந்து 3:2 என்ற ரீதியில் தொடரை வெற்றிபெற்றிருந்ததுடன், வெற்றியின் பின்னர், லண்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் சிறுநீர் கழித்து, அவுஸ்திரேலியாவைக் கேவலப்படுத்தி இருந்தமை, பல சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தன.
இதற்கு பதிலடியாக போட்டியின் ஆரம்பம் முதலே அவுஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து வீரர்களை கொச்சைப்படுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment