கல்முனை: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் புதிதாக இணைந்து கொண்ட அங்கத்தவர்களுக்கு கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவம் மற்றும் புதிய கிளைகளுக்கான தேசிய பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், மை பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், இளம் புரவலருமாகிய அல்ஹாஜ் ஏ.சி.யஹியாகான் தலைமையில் அவருடைய கல்முனை காரியாலயத்தில் இடம்பெற்றது.
ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஹமீட், எம்.பஸ்லான் ஆகியோர் ஏ.சி.யஹியாகானிடமிருந்து அங்கத்துவ அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதையும் அருகில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். உதுமாலெப்பை , செயலாளர் ஏ.சி.எம். றியால் ஆகியோர் நிற்பதையும், கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Published by



Leave a comment