தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபுமொழிபீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு

south eastern uniஒலுவில்: தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடத்தின் முதலாவது சர்வதேச ஆய்வரங்கு இஸ்லாமிய அறிவியலையும் மானுட, சமூக அறிவியலையும் ஒன்றிணைப்பதை நோக்கி எனும் தொனிப்பொருளில் இன்று 05.01.2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வாய்வரங்குக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகவும், இலங்கை ஜாமியாஹ் நளீமியாஹ் கல்லூரியின் பணிப்பாளரும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட அரபு மொழி இஸ்லாமிய கற்கைகள் விரிவுரையாளரும், இலங்கையின் மிக முக்கிய கல்வி ஆளுமைகளுள் ஒருவருமான கலாநிதி. எம்.ஏ.எம்.சுக்ரி சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றவுள்ளார்.

Published by

Leave a comment