அண்ணல் நபி வழியில் அநாதரவற்றோரை அணைக்கும் விழா-2014 சமூகத்தை நோக்கிய பயணம் 29

ILMI ahamed lebbeபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: வறிய, பெற்றோரை இழந்த மாணவர்களும், காத்தான்குடி பொதுச்சந்தைகளில் மிக நீண்ட காலமாக குறிஞ்சா இலை,பொன்னாங்கன்னி, கீரைகள் விற்பனை செய்யும் தமிழ் தாய்மார்களின் பிள்ளைகளும் இனங்காணப்பட்டு காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை யினால் வறிய அநாதை முஸ்லிம் தமிழ் மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கும் நிகழ்வு இன்ஸா அழ்ழாஹ் எதிர்வரும் 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு உற்பத்தித்திறண் மேம்பாட்டு அமைச்சர் பஸீர் சேகுதாவூத் MP அவர்கள் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி PSM. சாள்ஸ், காத்தான்குடி நகர முதல்வர் SHM. அஸ்பர் அவர்களும் மற்றும் உலமாக்கள், கல்விமான்கள் பொது நிறுவனங்களின் தலைவர்கள் என்று ஊரின் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தகவல்.
MMM. தாஹிர் JP (பொருளாளர்)
MIM. முஸம்மில் (உப செயலாளர்)
(விழாக் குழு)

Published by

Leave a comment