2014: இருபது20 மற்றும் ஆசிய கிண்ணப்போட்டிகளை நடாத்த இலங்கை தயார்!
– MJ
லண்டன்: இவ்வருடம் மார்ச் (March 16 to April 6) மாதம் பங்களாதேஸில் இடம்பெறவுள்ள உலக இருபது20 (T20) கிண்ணப்போட்டி, அந்நாட்டின் உந்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் அபாயங்களும் காத்திருப்பதால், பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டியையும் (February 24 and March 7), அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள உலக இருபது20 தொடரையும் வேறு ஆசிய நாடொன்றில் நடாத்த சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் உத்தேசித்துள்ளது.
இதன்படி, உலக இருபது20 கிண்ணப்போட்டியையும், ஆசியக் கிண்ணப் போட்டியையும் இலங்கையில் நடாத்த இலங்கை கிரிக்கட் சபை ஆவல் கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில், 2009ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கட் போட்டிகளை நடாத்த தடைவிதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், தனது நாட்டில் மேற்படி இரு தொடர்களையும் நடாத்த உத்தேசித்து ஐ.சி.சி இற்கு கோரிக்கை விடுத்திருக்கின்றது.
இருந்த போதிலும், சுமார் 2 மாதங்களே உலகக் கிண்ண இருபது20 தொடர் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், இத்தகைய மாற்றத்தை இலங்கையில் நடாத்துவதற்கு ஐ.சி.சியிற்கு இலகுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதால், பங்களாதேஸ் பின்வாங்குமிடத்து, இத்தொடர் இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடாத்த ஐ.சி.சி. சம்மதிக்கும்.
2012 இருபது20 வெற்றிக்களிப்பில்
விற்கப்பட்ட மற்றும் விற்பனைக்கு விடப்பட்ட இருபது20 உலகக் கிண்ணத்துக்கான நுழைவுச் சீட்டுக்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
கடந்த இருபது20 உலகக் கிண்ணப்போட்டி இலங்கையில் நடாத்தப்பட்டது. இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிய அரை இறுதிப்போட்டியின் போது, போட்டி நடுவர்கள் சிலர் லஞ்சம் பெற்றதாகவும், குறித்த போட்டியின் ஆடுகளம் இலங்கை அணிக்கு ஏதுவாக மாற்றப்பட்டிருந்ததாகவும் எழுந்த புகார்களை அடுத்து, ஐ.சி.சி விரிவான விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன், சம்பந்தப்பட்டவர்களை தனது உறுப்பிலிருந்து நீக்கியதுடன், ஆடுகள மாற்றத்தை ஏற்படுத்த உதவிய இலங்கை கிரிக்கட் சபைக்கு எச்சரிக்கையையும் ஐ.சி.சி வழங்கி இருந்தது.
எனினும், இதுவரைக்கும் இப்போட்டியை நடாத்த இந்தியா முன்வரவில்லை.
பங்களாதேசில் ஏற்பட்டுவரும் உள்ளக கலவரங்களால், பிரதான நகரங்களில் தீமூட்டங்களும், உயிராபத்துக்களும் தொடர்ந்து இடம்பெற்றுவருவதையிட்டு, குறித்த உலக இருபது20 தொடரை நடாத்த தற்பொழுது பங்களாதேஷ் பின்வாங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment