காத்தான்குடி: பள்ளிவாயல்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறதிப்படுத்த வேண்டும் இல்லையேல் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் N.K. றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மைக் காலமாக நாட்டின் நலாபுரங்களிலும் உள்ள பள்ளிவாயல்கள் மீது இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர் அதனை தடுத்து நிறுத்தும் பொருட்டு பள்ளிவாயல்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் இல்லையேல் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கமும் பாதுகாப்புத்தரப்பினரும் பொறுப்புக் கூற வேண்டும்.
இந்த நாட்டில் அண்மைக் காலமாக இன அடக்கு முறையும் மத அடக்கு முறையும் தலைவிறித்தாடி வருகின்றது இலங்கை முஸ்லிம்கள் தங்களது மத அனுஸ்டானங்களை கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாது பாரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் இன வாதிகள் முஸ்லிம்களை திட்டமிட்டு மத அடக்கு முறைக்கு உட்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறுபட்ட செயற்பாடுகளை மிக சுதந்திரமாக அரங்கேற்ரியும் வருகின்றனர். இந்த நாட்டின் ஒரு சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அடக்கி அடிமைப்படுத்த பௌத்த இனவாதிகள் வரிந்து கட்டிக் கொண்டு பல்வேறு வழிகளில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்.
அதன் வெளிப்பாடாகவே இன்று இலங்கை முஸ்லிம்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டின் நாலாபுரங்களிலும் உள்ள அதிகமான பள்ளிவாயல்கள் இனவாதிகளின் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாரன சுயநலமிக்க பௌத்த இனவாதிகளின் அசாதாரன செயற்பாட்டின் மூலம் இந்த நாட்டில்
மிகவும் உன்னிப்பாக பேனப்பட்டு வந்த பௌத்த முஸ்லிம் இன நல்லுரவு வெகுவாக பாதிக்கப்படுகின்றது. மிகவும் இறுக்கமான இன நல்லுரவுடன் வாழ்ந்து வரும் பௌத்த முஸ்லிம் மக்களின் இன நல்லுரவை சீர்குலைக்க வேறு இடங்கலிருந்து வாகனங்களில் வருகைதந்து பள்ளிவாயல்கள் மீது தாக்குதல்களை நடாத்தி விட்டு தப்பிச் செல்கின்றனர்.
யுத்தத்தின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டு மிக அமைதியாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் இன்று இனவாதத்தின் கோரப்பிடிக்குல் சிக்கித் தவிக்கின்றனர் பௌத்த இனவாதிகளின் கோரப்பிடியிலிருந்து முஸ்லிம்களையும் அவர்களது வணக்கஸ்தலங்களையும் பொருளாதாரங்களையும் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்த நாட்டு அரசாங்திற்குறியது இன்று இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வருகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளமன்ற உறுப்பினர்களும் இன்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்புடனும் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களின் கரங்களை பலப்படுத்தியுமே செயற்பட்டு வருகின்றனர்
இவ்வாரான சூழ்நிலையில் இந்த நாட்டு முஸ்லிம்கள் இனரீதியாக அடிமைப்படுத்தப்பட்டும் அவர்களது மத கலாச்சாரங்களை பேன முடியாது தடுக்கப்பட்டும் வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டும் வருவது ஒரு ஆரோக்கியமான செயற்பாடாக இருக்க முடியாது ஆளும் கட்சியில் அதிகார பலத்துடன் முஸ்லிம் தலைமைகள் மௌனித்து இருப்பது புரியாத புதிராகவுள்ளது. இந்த நாட்டின் எந்தவொரு அரசியல் அதிகாரமும் இல்லாத இன்னுமோர் சிறுபான்மை இனத்தின் அரசியல் தலைமைகள் தங்களது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டதை கண்டித்து வீதியில் இறங்கி போராட்டம் நடாத்துகின்ற போது பள்ளிவாயல்கள் தாக்கப்படுகின்ற சமயம் அதிகாரத்துடன் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மேலும் கவளையைஏற்படுத்தியுள்ளது.
இவ்வாரான அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியாத முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் தலைமைகளுக்கும் எதிர் வருகின்ற தேர்தல்களில் முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
Published by

Leave a comment