காத்தான்குடி: அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காத்தான்குடி பிரதேசத்திலும்,பொதுவாக இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளில் மனிதநல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வரும் ஷரீப்தீன் பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீன் நளீமியுடனான விஷேட கலந்துரையாடல் 03-01-2014 இன்று வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின்னர் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஷரீப்தீன் பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீன் நளீமியினால் விஷேட உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.
இங்கு முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகள்,தற்காலத்தில் ஜூம்மா உரைகள் எவ்வாறு நடத்தப்பட்டவேண்டும்,உலமாக்களுடனான ஒத்துழைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவரும், காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயூட்காலத் தலைவர் மௌலவி முஸ்தபா (பஹ்ஜி), காத்தான்குடி முஹைதீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி அமீன் (பலாஹி), ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷேய்க் எம்.சி.எம்.றிஸ்வான் (மதனி), அதன் செயலாளர் எம்.எச்.ஜிப்ரி மதனி ,நிர்வாக செயலாளர் அஷ்ஷெய்க் அமானி நளீமி, ஷரீப்தீன் பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் செய்யத் அலவி ஷரீப்தீனின் செயலாளர் ஸாகிர்,இணைப்பாளர் ஜவ்பர் உட்பட காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபை உலமாக்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Published by




Leave a comment