லண்டன்: கடந்த 1ம் திகதி, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் குயின்ஸ்டவுண் மைதானத்தில் இடம்பெற்ற 3வது ஒருநாள் போட்டி மழைகாரணமாக 21 ஓவர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அமைந்திருந்தது.
இத்தகைய 21 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் குரோ அண்டர்சன் 36 பந்துகளுக்கு 100 ஓட்டங்களை பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேக சதத்தைப் பெற்ற வீரராக புகழப்பட்டார்.
அதன் பின்னர் சர்வதேச ஊடகங்கள் குறித்த சாதனைபற்றி விமர்சித்திருந்தாலும், ஓர் உலக சாதனையாக அமையுமா? என்ற சந்தேகத்துடன் எழுதி வந்தன.
குரே அண்டர்சன்
எனினும், நாம் குறிப்பிட்டிருந்ததுபோல் ‘குரே அண்டர்சனின் 36 பந்துகளில் பெற்ற சதமானது ஓர் உலக சாதனையே’ என நேற்று ஐ.சி.சி. திட்டவட்டதாக அறிவித்திருக்கின்றது.
உண்மையில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆகக் குறைந்த ஓவர்கள் 25ஆகவும், அதிகூடிய ஓவர்கள் 50ஆகவுமே ஐ.சி.சி நிர்ணயித்திருக்கின்றது. எனினும் மோசமான காலநிலை ஏற்படின் விதிவிலக்கற்று ஒருநாள் போட்டிகள் அமைந்துவிடுவதை ஐ.சி.சி ஏற்றுக்கொண்டிருக்கின்றது.
இதன்படி, கடந்த வருடம் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் மழைகுறுக்கிட்டதால், இறுதியாக 20 ஓவர்களுக்குள் ஓர் சர்வதேச ஒருநாள் சம்பியன் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி அமைந்திருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், பல விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தமையும் இங்கு வரலாறு.
இதே போல் ஐ.சி.சியின் ‘டக்வேர்த்’ விதிமுறைகளிலும், தற்பொழுது அறிமுகப்படுத்திவரும் ‘ஹொட் ஸ்பொட்’ மீள் அப்பீள் முறைகளிலும் பல தவறுகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துவருவதும் ஐ.சி.சி. விதிகளில் தளர்வுகள் உள்ளதை தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
Leave a comment