ஏறாவூர்: உள்ளுர் கனிவர்க்கங்களையும் மூலிகைகளையும் ஊக்குவிக்கும் முகமாக ஏறாவூர் நகர பிரதேச செயலக வளாகத்தில் முன்மாதிரித் தோட்டமொன்று புத்தாண்டு தினமான நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த முன்மாதிரித் தோட்டத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா வைபவ ரீதியாக பிரதேச செயலக ஊழியர்கள் சகிதம் மரங்களை நாட்டினார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலக வளாகத்திற்குள் நிலப்பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் தற்போது இருக்கும் குறுகலான நிலத்தைப் பயன்படுத்தி இந்த முன்மாதிரித் தோட்;டம் திட்டமிடப்பட்டதாக பிரதேச செயலாளர் சொன்னார்.
இந்தத் தோட்டம் பிரதேச செயலகத்;தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும் பிரதேசத்திலுள்ள பொதுமக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.
நிகழ்வில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Published by



Leave a comment