கிண்ணியா: கிண்ணியா நகரசபை தலைவராக பதவியேற்று தமது சேவைக்காலத்தில் சேவைகள் பலவற்றை வெற்றிகரமாக மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபை ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு ஒன்றுகூடல் நகரசபை மண்டபத்தில் வெகுவிமர்சியாக இடம்பெற்றது.
நிகழ்வில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக 2013 ஆம் ஆண்டு கிண்ணியா நகரசபையால் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள், முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்படவிருக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் நகரசபையால் மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் சேவைகள் செய்யப்படவிருக்கும் சேவைகள் இன்னும் நகரசபை எதிர்நோக்கும் சவால்கள் இன்னோரன்ன விடயங்களையும் கலந்தாலோசித்து ஏனைய திணைக்களங்களின் தலைவர்களுடன் நல்லாட்சி ஒன்றினை சுமூகமாக ஒன்றிணைந்து செயற்படுத்துவதற்காகவும் தெரிவித்தார்.
அத்தோடு கிண்ணியா நகரசபை எல்லைக்குள் அமைக்கப்படும் சகல விதமான வேலைத்திட்டங்களின் திருப்திகரமான நிறைவுகளுகளுக்கு நன்றியினையும் தெரிவித்தார். நகரசபை முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சவால்களாக காணப்படும் அனைத்து விடயங்களையும் வெற்றிகொண்டு 2014 இல் திட்டமிட்டு அனைத்தையும் வென்றெடுப்போம் என்பதான நட்புறவு ஒன்றுகூடலாக குறித்த ஒன்றுகூடல் அமைந்திருப்பதாக நகரபிதா தெரிவித்தார்.
இதன் போது கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா நகரசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், பிரதி பிரதம செயலாளர் பொறியியல் சேவை பாஸ்கரதாஸ், ஆர்.டி.ஏ பிரதம பொறியியலாளர் மோகனதாஸ், ஆர்.டி.டி. ராஜமோகன், மாகாண உதவி திட்டமிடல் பணிப்பாளர் (புறநெகும) தமிழ் செல்வன், கிண்ணியாவில் இயங்கும் அரச அரச சார்பற்ற திணைக்கள நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், உறுப்பிர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள் மற்றும் முக்கிய திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட கிண்ணியா நகரசபை உத்தியோகத்தர்களும் வைபவத்தின் போது கலந்து சிறப்பிந்திருந்தனர்.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேகுணவர்த்தன, முதலமைச்சரின் உதவிச் செயலாளர் சட்டத்தரணி சித்திரவேல், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.குணநாதன், பிரிகேட் கொமான்டர் விகும் லியனகே, ஓ.ஐ.சி அசோக கொடகே ஆகியோரும் கலந்திருந்தனர்.
Published by




Leave a comment