குயீன்ஸ்டவுன்: ஒரு நாள் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன். குயீன்ஸ்டவுனில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது இந்த சாதனையை அவர் படைத்தார்.வெறும் 36 பந்துகளில் அவர் சதம் போட்டார். மேலும் இதுவரை குறைந்த பந்துகளில் சதம் போட்டிருந்த பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் சாதனயையும் கோரி முறியடித்தார்.கடைசி வரை ஆட்டமே இழக்காமல் அடித்து வெளுத்த கோரி 47 பந்துகளில் 131 ஓட்டங்களைக் குவித்து மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சை திணறடித்தார்.தனது இன்னிங்ஸின்போது 14 சிக்ஸர்களைப் பறக்க விட்ட கோரி, 6 பவுண்டரிகளையும் விளாசினார். அதேபோல ஜெஸ்ஸி ரெய்டர் 51 பந்துகளில் 104 ஓட்டங்களைக் குவித்தார்.3வது ஒரு நாள் போட்டியான இது, மழை காரணமாக தலா 21 ஓவர்களைக் கொண்டதாக சுருக்கப்பட்டது. நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்க என்று முடித்தது.முன்னதாக அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். இது 1996ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது. அதை தற்போது 36 பந்துகளில் சதம் அடித்து, அதாவது ஒரு பந்து வித்தியாசத்தில் முறியடித்துள்ளார் கோரி.
Published by

![Shahid-afridi-001[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/shahid-afridi-0011.jpg?w=150&h=90)

![Shahid-afridi-001[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/shahid-afridi-0011.jpg?w=300&h=180)
Leave a comment