முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

unnamed (12)பழுலுல்லாஹ் பர்ஹான்

நாவிதன்வெளி: நாவிதன்வெளி பிரதேச சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ. தஜாப்தீன் அவரது கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பிரஸ்தாப பிரதேச சபை வாக்கெடுப்பு இரண்டு நாட்களின் பின்னர் நடைபெறும் பொழுது அவரது நிலைப்பாட்டில் மாற்றமில்லையானால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், அப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பகிரங்கமாக அறிவிப்பதற்கு முன்னர் மேடையில் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலியுடன் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்த பொழுது பிடிக்கப்பட்ட படம். திகாமடுல்லை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் ஆகியோரும் உடனிருந்தனர். 

unnamed (13)

கட்சியின் அறிவுறுத்தலுக்கும், ஆலோசனைக்கும் மாற்றமாக பிரதேச சபைக் கூட்டத்தில் அவர் நடந்து கொண்டது தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தலைவர் ஹக்கீம் அறிவிப்பு விடுத்தார். அத்துடன் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கல்விமான்கள் மற்றும் ஒன்பது பாலர் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வும் வெகு விமரிசையாக செவ்வாயன்று மாலை மத்திய முகாம் பிரதான வீதியில் ஆலையடிச்சந்தியில் இடம்பெற்ற பொழுது அப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ. தஜாப்தீன் அதில் கலந்து கொள்ளாதது மிகவும் விசனத்திற்குரியதென்றும் அமைச்சர் கூறினார். 

unnamed (12)

Published by

Leave a comment