புதிய வருடத்துக்கான அரச உத்தியேகத்தர் சத்தியப்பிரமாணம்

unnamed (2)பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட செலயகம் உட்பட மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள், அரச திணைக்களங்களில் புதிய வருடத்துக்கான அரச உத்தியேகத்தர் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன.

மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட பிரதம அணக்காளர் எஸ்.நேசராசா, திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்ட திணைக்களத்தலைவர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான இன்றைய நிகழ்வில், அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழவினைத் தொடர்ந்து அரசாங்க அதிபரின் சிறப்புரையும் அதனையடுத்து, பிரதம கணக்காளரது உரையும் நடைபெற்றன. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment