லண்டன்: நேற்று (01-01-2014) குயின்ஸ்டவுன் நகரில் இடம்பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஓருநாள் சர்வதேச போட்டி மழைகாரணமாக 21 ஓவர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இத்தகைய ஓர் நிலையில்தான் 21 ஓவர்களை கருத்திற்கொண்டு கொரே அண்டர்ஸன் இச்சாதனையை அதிரடியாக நிகழ்த்தி இருக்கின்றார் என தற்பொழுது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஓருநாள் சர்வதேச விதிமுறைகளின்படி, ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்றின் ஆகக் குறைந்ந ஓவர்கள் 25ஆக அமைய வேண்டும். அதைவிடக் குறையும்போட்டி, அன்றைய சர்வதேச போட்டியாக அமைந்தாலும் சில சிறப்பு விதிகளை சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் ஏற்படுத்தி இருக்கின்றது.
எவ்வாறிருந்த போதிலும் இத்தகைய குறைந்த ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டிகளில் பெறப்படும் ஓட்டங்களும், விக்கட்டுக்ளும் கணக்கிலெடுக்கப்பட்டே வருகின்றன. இன்று மாலை ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக சி. அணிடர்ஸனின் சாதனைபற்றி அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயத்தில் எவ்வித சலனமுமில்லாமல் இருக்கும் ஷஹீட் அப்ரிடி, ‘இத்தகைய ஓர் சாதனை மீண்டும் ஓர் பாகிஸ்தான் வீரரால் முறியடிக்கப்படும்’ என கூறியிருப்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது.
![ICC-logo-lrg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2011/10/icc-logo-lrg1.jpg?w=146&h=150)
Leave a comment