‘கெய்ல் அல்லது வோணர் ஆகிய இருவரில் ஒருவரே எனது சாதனையை உடைப்பார்கள் என எதிர்பார்த்திருந்தேன்’: அப்ரிடி

afridi1– MJ

லாஹூர்: நேற்று நியூஸிலாந்து, குயின்ஸ்டவுணில் இடம்பெற்ற நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் நியூஸிலாந்து அணியின் வீரர் கொரே அண்டர்ஸன் 36 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம், ஒருநாள் சர்வதேசப் போட்டி ஒன்றில் குறைந்த பந்துகளில் விரைவான சதத்தைப் பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஷஹீட் அப்ரிடி 37 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பெற்று சாதனை புரிந்திருந்தார். 1996ம் ஆண்டு, இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது 16 வயதில் இச்சாதனையை அப்ரிடி நிகழ்த்தி, கிரிக்கட் உலகில் ஓர் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தார்.

anderson
கொரே அண்டர்ஸன்

17 வருடங்களாக இக்காலத்தில் பிரபல்யமடைந்திருந்த எந்தவொரு வீரர்களாளும் உடைக்க முடியாதிருந்த இச்சாதனை நேற்றைய போட்டியில் தகர்க்கப்பட்டிருந்தாலும், உண்மையில் இப்போட்டி 50 ஓவர்களைக் கொண்டமைந்ததல்ல எனவும், 21 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த போட்டியொன்றிலேயே கொரே அண்டர்ஸன் இச்சாதனையை நிகழ்த்தியிருப்பதால், இது ஓர் சாதனையாக இருந்த போதிலும், கிரிக்கட் பிரமுகர்களுக்கும் சர்வதேச வீரர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கவில்லை என தற்பொழுது ஊடகங்கள் எழுதி வருகின்றன.

இதற்கிடையில், முன்னாள் இச்சாதனைக்குச் சொந்தக்காரரான பாகிஸ்தான் அணியின் சகலதுறை அதிரடி வீரர் அப்ரிடி,

CRICKET-PAK-RSA
ஷஹீட் அப்ரிடி

‘எனது சாதனையை சமப்படுத்த அல்லது முறியடிக்க முடியுமானால் அது ஒன்றில் கிறிஸ் கைல் அல்லது டேவிட் வோணர் ஆகிய இருவரில்  ஒருவரால்தான் முடியும் என நான் எதிர்பார்த்திருந்தேன்’ என்பதாக தனது முகநூல் பக்கத்தில் ஷஹீட் அப்ரிடி நேற்று இச்சாதனையின் பின்னர் தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமன்றி,

‘இச்சாதனை விரைவில் ஓர் பாகிஸ்தான் வீரராலேயே மீண்டும் முறியடிக்கப்படும்’ என அப்ரிடி மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment