விலைமாது வேலைக்கு பெண்கள் தேவை: இங்கிலாந்து அரசின் விளம்பரத்தால் பரபரப்பு

attenzione_prostitute11– SHM
லண்டன்: இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘விலைமாதுவாக பணி புரிய பெண்கள் தேவை’ என வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டன் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருவர் எந்த நாட்டுக்கு போக வேண்டுமோ? அந்த நாட்டில் பிரபலமாக இயங்கிவரும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தகவல் அளித்துவிட்டால் போதும். செல்பவர் ஆணாக இருந்தால் அழகான பெண்களின் புகைப்படங்களையும், பெண்ணாக இருந்தால் கட்டிளங்காளையர்களின் புகைப்படங்களையும் இந்த நிறுவனம் ‘இ-மெயில்’ மூலமாக அனுப்பி வைத்துவிடும்.

அதனைத் தொடர்ந்து, வாடிக்கையாளர் தனக்குப் பிடித்தமான நபரை தேர்வு செய்து தகவல் தெரிவித்து, உறுதிபடுத்தி விட்டால் போதும். விமான நிலையத்திற்கே வந்து வரவேற்பதில் தொடங்கி, வெளிநாட்டு வாடிக்கையாளரின் நிழல் போலவே இருந்து, அவர் போகும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவர் செலவிலேயே சாப்பிட்டு, அவர் தங்கும் அறையிலேயே இவர்கள் படுத்தும் தூங்குவார்கள்.
attenzione_prostitute11
இந்த வழித்துணையாளர்கள் அமைத்துத் தரும் பணி ‘எஸ்கொட் சேர்விஸ்’ என்றழைக்கப்படும். இதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு பெரிய தொகையை கட்டணமாக பெறும் இந்த நிறுவனங்கள், தங்களது கமிஷன் போக பணியமர்த்தப்படும் நபர்களுக்கு சொற்ப தொகையை சம்பளமாக தருகின்றன.
இவ்வகையில், இங்கிலாந்தில் இயங்கிவரும் இவ்வாறான ‘எஸ்கொட் சேர்விஸ்’  நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணயதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், ‘தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதில் பிரியம் இருந்தால் போதும். விருப்பம் உள்ள பெண்களுக்கு ஒரு மணி நேரத்துக்கான சம்பளமாக 10 பவுண்டுகள்  வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசின் வேலை வாய்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Published by

Leave a comment