கொழும்பு: காலாவதியாகிய நிலையில் புழுக்களுடன் கூடிய சொக்லேட் பவுடர் மற்றும் பேரீச்சம்பழங்களை கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு ரொஸ்மீட் பிளேஸ் மற்றும் பழைய சோனகத் தெரு ஆகிய இடங்களில் நேற்று நண்பகல் மேற்கொண்ட வெவ்வேறு சுற்றி வளைப்புகளின் போதே நுகர்வுக்குப் பொருத்தமில்லாத 400 கிலோகிராம் சொக்லட் பவுடரும் 500 கிலோ கிராம் பேரீச்சம் பழங்களும் கைப்பற்றப் பட்டிருப்பதாக கொழும்பு மாநகர சபைக்குப் பொறுப்பான டாக்டர் காரியவசம் நேற்று தெரிவித்தார்.
ரொஸ்மிட் பிளேசிலுள்ள இந்திய நிறுவனமொன்றுக்குச் சொந்தமான சொக்லட் உணவு பொருட்கள் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் நிலையமொன்றிலிருந்தே நேற்று காலாவதியான புழுக்களுடன் கூடிய 400 கிலோகிராம் நிறைகொண்ட சொக்லேட் பவுடர், கைப்பற்றப்பட்டுள்ளன. இவை சொக்லேட்டுக்கள் மற்றும் கேக், புடிங் போன்ற இனிப்பு பண்டங்கள் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
குறித்த நிலையம் கொழும்பு மாநகர சபை சுகாதார அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன் அதன் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பழைய சோனகத் தெருவில் பிரபல இறக்குமதியாளர்கள் காலாவதியான பேரீச்சம்பழங்களை கவர்ச்சிகரமாக பொதி செய்து சில்லறை கடைகளுக்கு விநியோகிக்க தயாராகயிருந்த நிலையிலேயே 500 கிலோகிராம் பேரீச்சம்பழங்களும் கைப்பற்றப்பட்டிருப் பதாகவும் அவர் கூறினார்.
மனித பாவனைக்கு சிறிதும் பொருத்தமில்லாத மேற்படி உணவுப் பொருட்களை கையாண்ட மற்றும் விற்பனை செய்ய முயற்சித்த நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் டொக்டர் காரியவசம் தெரிவித்தார்.TK
Published by

Leave a comment