டெண்டுல்கர், பொண்டிங் ஆகியோரால் முடியாமல்போனதை கலிஸ் நிறைவேற்றி விடைபெற்றார்!

kallis i– SHM
டேபன்:  சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பொண்டிங் ஆகிய இரு கிரிக்கெட் ‘ஸ்டார்கள்’ செய்யத் தவறியதை, இன்னொரு சூப்பர் ஸ்டாரான ஜக் கலிஸ் செய்து அசத்தி விட்டார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அட்டகாசமான சதம் போட்டு கல்லிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.
டெண்டுல்கர், பொண்டிங் ஆகிய இருவரும் தங்களது கடைசி டெஸ்ட் போட்டிகளில் சதம் போட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. டேபனில் நடந்த  இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிதான் கல்லிஸுக்குக் கடைசி டெஸ்ட் போட்டியாகும்.
இதில் அவர் தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி தான் ஒரு அனுபவம் நிறைந்த வீரர் என்பதை வெளிப்படுத்தினார். இந்தியப் பந்து வீச்சை சமாளித்து ஆடிய கல்லிஸ் 115 ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மைதானத்திலிருந்த பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் கலிஸிக்கு பிரியாவிடை வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
kallis i

Published by

Leave a comment