11 உலக நாடுகள் பங்குகொள்ளும் ஐ.சி.சி. 2014 சர்தேச சென் ஜோன்ஸ் கடெற் பாசறை மகாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து 22 பேர் நாளை அவுஸ்திரேலியா பயணம்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: அவுஸ்திரேலியா நாட்டு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில்; 2014 ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள ஐ.சி.சி. 2014 சர்தேச சென் ஜோன்ஸ்; கடெற் பாசறை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி சர்வதேச நிறுவனத்தின் கொழும்பு தலைமையக காரியாலயத்தினால் தெரிவு செய்யப்பட்ட 22 பேர் நாளை 31 திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா சர்தேச விமான நிலையத்திலிருந்து அவுஸ்திரேலியா பயனமாகவுள்ளதாக சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிபு தெரிவித்தார்.

இதில் சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் அஹமட் லெப்பை மீராசாஹிப், சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் கொழும்பு மாவட்ட ஆணையாளர் சரத் தயானந்தா, சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவனத்தின் குருநாகல் மாவட்ட உதவி ஆணையாளர் மல்லிகா ஹேரத் உட்பட 15,16,17,18 வயது சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் முதலுதவி நிறுவன உறுப்பினர்கள் பெற்றோர்கள் என 22 பேர் குழுவாக பயணமாகவுள்ளனர்.

கனடா,இங்கிலாந்து ,ஹொங்கோங்,மலேசியா,நியூஸ்லாந்,சிங்கபூர்,சாலமன் தீவுகள், தென்னாபிரிக்க, இலங்கை, வேல்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய 11 உலக நாடுகளில் இருந்து 400 மேற்பட்டோர் கலந்து கொள்ளும் இம் மகாநாட்டில் மகாநாடு இடம்பெறும் அவுஸ்திரேலியா நாட்டுக்கு அடுத்ததாக அதிகமானோர் பங்குபற்றும் நாடு இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

11 உலக நாடுகள் பங்குகொள்ளும் இம்மகாநாடு 2014 ஜனவரி 2 திகதி தொடக்கம் 11 திகதி வரை இடம்பெறும்.

Published by

Leave a comment