பால்மா களஞ்சியசாலைகள்: பதுக்கல் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி

glass-of-milk[1]கொழும்பு: தனியார் பால் மா கம்பனிகளின் களஞ்சியசாலைகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் பதிவு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை (31) வெளியிடப்படுமென நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிவரவுள்ள வர்த்தமானிக்கமைய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் எச்சந்தர்ப்பத்திலும் தனியாருக்குச் சொந்தமான பால் மா களஞ்சியசாலைகளை சோதனையிடக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வரெனவும் அதிகார சபையின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

நாடு முழுவதும் பால் மாவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்ற இச்சந்தர்ப்பத்தில் பால் மா பக்கற்றுகளை பதுக்கி விலையதிகரிப்பினை ஏற்படுத்த முயற்சிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சவாலாகவே இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தீர்மானித்துள்ளார்.

தனியார் பால்மா நிறுவனங்கள் 400 கிராம் மற்றும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கற்றுகளின் விலைகளை அதிகரிப்பதற்காக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் பல தடவைகள் அனுமதி கோரியிருந்தன. அமைச்சர் அந்நிறுவனங்களின் கோரிக்கையினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததையடுத்து பால் மாவிற்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் இந்நிறுவனங்கள் திட்டமிட்டு செயற்பட ஆரம்பித்துள்ளன.

இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மா வகைகளின் கையிருப்பை அறிந்து கொள்ளக்கூடிய வகையிலேயே இப்புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவுள்ளது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு, செலவுத் திட்ட விவாதத்தின் போதும் பால்மா தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் சட்ட விதிமுறைகளை உள்ளடக்கியதான புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிட்டு வைக்கப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் உறுதியளித்திருந்தார். அதற்கமைய இந்த புதிய வர்த்தமானி நாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக் கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுமார் இரு மாதங்க ளுக்கும் மேலாக பதுக்கி வைக்கப்பட்டி ருக்கும் பால் மா பக்கற்றுகளை கைப் பற்றுவதற்கென நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலக சந்தையில் ஒரு மெற்றிக் தொன் பால் மாவின் விலை 5400 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்திருப்பதனால் உள்ளூரில் பால் மாவின் விலைகள்

அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை பால் மா இறக்குமதி செய்கின்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் முன்வைத்த வண்ணமே உள்ளன. TK

Published by

Leave a comment