காத்தான்குடி: வாசிப்பின் மூலம் அறிவைப் பெறுவோம் எனும் தொனிப்பொருளில் 2013 தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கும் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தகக் கண்காட்சி ஒன்று காத்தான்குடி பொது நூலகத்தில் 29-12-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன் போது இப் புத்தகக் கண்காட்சிக் கூடத்தை காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஜேபி பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் நியாஸ்,காத்தான்குடி பொது நூலகத்தின் நூலக உதவியாளர் எஸ்.எல்.எம்.முபாரக், காத்தான்குடி பொது நூலக உத்தியோகத்தர்கள்,இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புதிய நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
Published by

Leave a comment