சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில்

city opticalபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி நகரில் கடந்த 6 வருடங்களாக கண் பரிசோதனை மற்றும் கண் சம்மந்தமாக பொது மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை சிறந்த முறையில் வழங்கிவரும் சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் 29-12-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.சமீல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2.00 மணிவரை முற்றிலும் இலவசமாக இடம்பெறவுள்ள இவ் இலவச கண் பரிசோதனை முகாமில் கண் நோயுள்ள அனைத்து சகோதர சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டதுடன் சுமார் 750 பேருக்கு மாத்திரம் இலவச கண் பரிசோதனை இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

இவ் இலவச கண் பரிசோதனை முகாம் தொர்பான மேலதிக விபரங்களுக்கு இவ் இரண்டு தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முடியும்.

சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின்
காத்தான்குடிக் கிளை முகாமையாளர்
செட்.எம்.சஜி-0773664464

சிட்டி ஒப்டிகல் கண்ணாடி ஸ்தாபனத்தின்
மட்டக்களப்புக் கிளை முகாமையாளர்
எஸ்.ஏ.எம்.சமீல்-0779583437

Published by

Leave a comment